Enable Javscript for better performance
குமாரபாளையத்தில் உலக ஒருமைப்பாட்டு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒருமைப்பாட்டு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
     ஆனங்கூர் பிரிவு சாலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் நகராட்சி அலுவலகம் முன்பாக முடிவடைந்தது.  
    இந்த ஊர்வலத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் ராஜு தலைமை வகித்தார்.  நிர்வாகிகள் எஸ்.சேகர், பாலசுப்ரமணி,  சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊர்வலத்தில், ஒருமைப்பாடு குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
    நகரப் பொதுச் செயலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஊர்வலத்தின் முடிவில், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  
    மேலும்,  சர்தார் வல்லபபாய் படேலின் அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai