Enable Javscript for better performance
சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினம்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினம்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு

    By DIN  |   Published on : 01st November 2017 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.  தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியான இந்திய நாட்டின் ஒற்றுமையையும்,  ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும், அதை பேணுவதற்கு என்னை உவந்தளிப்பேன்.  எனது நாட்டு மக்களிடையே நல்இயல்புகளை பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன். சர்தார் வல்லபபாய் படேலின் தொலை நோக்கு பார்வையாலும்,  நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல் உணர்வைப் பேண உறுதிமொழி ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    இதில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.  இந் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி,  கூடுதல் கண்காணிப்பாளர் ராமசாமி,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்சில் ராஜ்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai