Enable Javscript for better performance
"தயாரித்த தீவனத்தை பாதுகாப்பாக உயர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "தயாரித்த தீவனத்தை பாதுகாப்பாக உயர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 01st November 2017 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
     அடுத்த 3 நாட்கள் வானம் நிறைந்த மேக மூட்டத்துடன் காணப்படும்.  இன்று 18 மி.மீட்டரும்,  நாளை (வியாழக்கிழமை) 12 மி.மீட்டரும்,  நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 26 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  காற்று மணிக்கு 2 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும்.  வெப்பநிலையைப் பொருத்த வரையில் அதிகபட்சமாக இன்றும்,  நாளையும் 87.8 டிகிரியாகவும்,  நாளைமறுநாள் 86 டிகிரியாகவும் இருக்கும்.  குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாக இருக்கும்.  காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும்,  குறைந்தபட்சமாக 65 சதவீதமாகவும் இருக்கும்.  சிறப்பு வானிலையைப் பொருத்த வரையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதையடுத்து,  மேகமூட்டமும் பரவலான மழையுமான வானிலை நிலவும்.  வெப்ப அளவுகள் குறைந்து கோழிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும்.  இருப்பினும்,  ஈரப்பதம் அதிகரித்து காணப்படுவதால்,  தீவன மூலப்பொருட்களில் பூஞ்சான நச்சு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தயாரித்த தீவனத்தை பாதுகாப்பாக உயர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்.  மேலும்,  கோழித் தீவன மூலப்பொருட்களை கொள்முதல் செய்யும் போதே,  ஈரப்பதம் 11 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai