Enable Javscript for better performance
நாமக்கல்லில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது.  கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார்.  மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் மருத்துவர் இளங்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.  கூட்டத்தில் தே.மு.தி.க. சார்பில் வருகிற 6-ஆம் தேதி பரம்பிக்குளம் ஆறு மற்றும் ஆழியாறு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்தக்கோரி உடுமலைப்பேட்டையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
        கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவா,  செல்வி,  மணி,  மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் ராஜ்குமார் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள்,  தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai