பரமத்தி மலர் பள்ளியின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
By DIN | Published on : 01st November 2017 08:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் பள்ளி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரமத்தி மலர் பள்ளியின் சார்பில் நடைபெற்ற பேரணியை பள்ளியின் தலைவர் பழனியப்பன் துவக்கி வைத்தார். பள்ளி முன்பு துவங்கிய பேரணி பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியின் போது, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் பள்ளியின் முதல்வர் கிரிஷ் நாயர், பள்ளியின் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், இயக்குநர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பரமத்தி பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.