Enable Javscript for better performance
மோகனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி மீண்டும் திறப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸார் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    மோகனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி மீண்டும் திறப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸார் பாதுகாப்பு

    By DIN  |   Published on : 02nd November 2017 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் குவாரி திறக்கப்பட்டு,  மணல் விற்பனை செய்யும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் சமாளிக்கும் வகையில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    காவிரி ஆற்றில் மோகனூர் அருகே ஒருவந்தூர் எனுமிடத்தில் மணல் குவாரி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு,  மோகனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததோடு,  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    இதனால்,  மணல் குவாரி தாற்காலிகமாக மூடப்பட்டது.  இந்நிலையில், புதன்கிழமை ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மீண்டும் குவாரி திறக்கப்பட்டு,  வாகனங்கள் மூலம் மணல் அள்ளி எடுத்துச் செல்லப்பட்டது.  சம்பவ இடத்தில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் எனக் கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ஆனால், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் எவ்வித எதிர்ப்பும் கிளம்பாததால்,  தொடர்ந்து லாரிகள் மூலம் மணல் விற்பனை தொடர்ந்து நடைபெற்றது.
    இருந்தபோதிலும்,  அசம்பாவிதம் ஏற்பாடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.ராமசாமி தலைமையில் திரளான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai