Enable Javscript for better performance
கொப்பரைத் தேங்காய் வரத்துக் குறைந்தது- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காயின் வரத்துக் குறைந்துள்ளதால் விலையும் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் பரமத்தி வேலூர்,வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வியாழக்கிழமை நடைபெறும் ஏலத்துக்குக் கொண்டு வருகின்றனர். அங்கு தரத்துக்குத் தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,988 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 115.10 பைசாவிற்கு, குறைந்த பட்சமாக ரூ.108.40 பைசாவிற்கும், சராசரியாக ரூ.113.20 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 982-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
    நிகழ் வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,333 கிலோ கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 116.25 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக ரூ.101.25 பைசாவிற்கும், சராசரியாக ரூ. 106.60 பைசாவிற்கும் ஏலம் போனது.
    மொத்தம் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 824-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கொப்பரைத் தேங்காயின் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai