Enable Javscript for better performance
நாமக்கல் அருகே நீர்வழித்தட ஆக்கிரமிப்பைஅகற்றக் கோரி முதல்வருக்கு மனு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் அருகே நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முதல்வருக்கு மனு

    By DIN  |   Published on : 03rd November 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே நீர்வழித்தட ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிடக் கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
    இதுகுறித்து, நாமக்கல்லை அடுத்த அண்ணா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பிய மனு விவரம் :   நாமக்கல்- துறையூர் சாலையில் அண்ணா நகர் அமைந்துள்ளது.  இப் பகுதியில் துறையூர் சாலையின் குறுக்கே இரு பெரிய பாலங்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன. இப் பாலத்தின் வழியாக டவர் கரடு,  ஆண்டவர் நகர்,  கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அண்ணா நகர் சின்னகுட்டைக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
    தற்போது கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பாலம் மண்ணைக் கொட்டி அடைக்கப்பட்டுள்ளது.  தென்பகுதியில் இரண்டு மதகுகளையும் அடைத்து,  கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.  இதனால், சின்னகுட்டைக்கு தண்ணீர் வரத்து நின்றுபோனது. சின்னக்குட்டைக்கு நீர்வரத்து இல்லாததால்,  நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  தண்ணீர் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.  எனவே,  நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி,  வருவாய்த் துறை கணக்குகளின் பதிவேட்டின்படி வெள்ளவாரியை தூர்வாரி செப்பனிட வேண்டும்.  இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு இருமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  எனவே, நீர்வழித் தட ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.  இப் பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai