Enable Javscript for better performance
பாவை நர்சிங் மற்றும் பார்மஸி கல்லூரிமுதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    பாவை நர்சிங் மற்றும் பார்மஸி கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

    By DIN  |   Published on : 03rd November 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாவை காலேஜ் ஆப் நர்சிங் அன்ட் ரிசர்ச் மற்றும் பாவை காலேஜ் ஆப் பார்மஸி அன்ட் ரிசர்ச் கல்லூரிகளின் பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் பார்மசி படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
    விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். பாவை காலேஜ் ஆப் நர்சிங் அன்ட் ரிசர்ச் கல்லூரியின் முதல்வர் முனைவர். எ.ஹெப்சி ராச்சல் சார்லஸ் வரவேற்றார்.
    தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்துப் பேசியது: "மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய அறிவு, ஆற்றல், ஆளுமைத் திறமை, முழுமையான குறிக்கோள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு வாழ்வில் ஒழுக்கமான நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
    நர்சிங் என்பது முழுமனதுடன் தன் பணிக்காக வாழ்வை அர்ப்பணித்து இரக்கமனப்பான்மையுடனும், சகோதரத்துவம் மற்றும்; அன்புடன் அளிக்கக்கூடிய அக்கறைமிகுந்த பணியாகும். பார்மஷி என்பது மருத்துவப் பணிக்கு ஆதாரமான மருந்துகளை உருவாக்கும் அற்புதமான பணியாகும். அந்த உயர்ந்த பணிக்காக உருவாகும் நீங்கள் முதல் வகுப்புதொடங்கும் இந்நாளிலிருந்தே உங்கள் எண்ணங்கள், செயல்கள் அனைத்தையும் அப்பணியோடு உருவகித்து செயல்பட வேண்டும். மேலும் நாடெங்கும் உயிர்கொல்லி நோய் பரவும் இக்கால கட்டங்களில் நீங்கள் உங்கள் பொறுப்பினை உணர்ந்து உங்களுடைய மனங்களைப் பக்குவப்படுத்தி கொண்டு செயலாற்ற வேண்டும். உங்கள் படிப்பினில் உங்களுக்கு முழுமையான அறிவையும், ஆளுமையையும் நீங்கள் பெற அனைத்து வழிகளிலும் பாவை கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்றார்.
    பின்னர் மாணவ,மாணவியர் தனது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். இறுதியாக பாவை காலேஜ் ஆப் பார்மஸி அன்ட் ரிசர்ச் கல்லூரியின் முதல்வர் ஆர்.பி.எழில்முத்து நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.இராமசாமி, துணை முதல்வர் ஆர்.சிவக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள்,மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai