முட்டை கொள்முதல் விலை ரூ. 4.26 காசுகளாக உயர்வு
By DIN | Published on : 03rd November 2017 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 4.20 காசுகளாக இருந்து வந்தது. வியாழக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 6 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டு கொள்முதல் விலை ரூ. 4.26 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் வருமாறு:
சென்னை ரூ. 4.60, ஐதராபாத் ரூ. 4.32, விஜயவாடா, பார்வாலா ரூ. 4.41, மும்பை ரூ. 4.74, மைசூரு ரூ. 4.40, பெங்களூரு ரூ. 4.50, கொல்கத்தா ரூ. 4.67, தில்லி ரூ. 4.60 காசுகளாகும். கறிக்கோழி கிலோ ரூ. 69-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வியாழக்கிழமை பல்லடத்தில் நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ. 5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே, கறிக்கோழி விலை கிலோ ரூ. 74ஆக உயர்ந்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ. 91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி முட்டைக்கோழி விலை கிலோ ரூ.93ஆக உயர்ந்துள்ளது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.