Enable Javscript for better performance
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பெளர்ணமியைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம்
    நடைபெற்றது.
    கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி முதல் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் பரம்பரை அறக்கட்டளைதாரர்களால் நடத்தப்படும். இதையடுத்து, நிகழாண்டு நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் முன்னதாக கைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.  
    இதைத் தொடர்ந்து,  மூலவரான ஸ்ரீகைலாசநாதர் சுவாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக நிரந்தரக் கட்டளைதாரர் பெப்சி பி.சுரேஷ்குமார் குடும்பத்தினர், கோயில் சிவாச்சாரியார்கள் உமாபதி சிவம், தட்சிணாமூர்த்தி சிவம் ஆகியோர் செய்திருந்தனர்.
    சீராப்பள்ளி செவ்விந்தீஸ்வரர் கோயில்: ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி செவ்விந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பௌர்ணமி அன்னாபிஷேக விழாவையொட்டி அதிகாலை முதல் சுவாமிக்கு சங்குபூஜை, வெண்ணை காப்பு அலங்கார பூஜை, போன்றவை நடத்தப்பட்டது. பின்னர் மாலை நடந்த சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதல் சுற்று வட்டாரப் பகுதியின் பக்தர்கள் பங்கேற்றார்.
    அலவாய்மலை சித்தேஸ்வரர் கோயில்: இதேபோல ராசிபுரம் அருகேயுள்ள அலவாய்மலை சித்தேஸ்வரர் மலைக் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் முன்னதாக விநாயகர் பூஜை, ஹோம பூஜை, நவகிரஹ,பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, அன்னாபிஷேகமும், பிரதோஷ வழிபாடும் நடைபெற்றது.
    இதில் பக்தர்கள் ஏரளானமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
    குமாரபாளையத்தில்...
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா நகரில் உள்ள மங்களாம்பிகை உடனமர் மகுடேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக வழிபாடு  வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. விழாவில் குமாரபாளையம்,  நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பரமத்தி வேலூரில்...
    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட திருவேலீஸ்வரர்,பரமத்தி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், மோகனூர் அசலதீபேஷ்வரர், பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர், பேட்டை சிவன் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai