Enable Javscript for better performance
டெங்கு தடுப்பு: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மு.ஆசியாமரியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், மதியம்பட்டி மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குடியிருப்புப் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு குழு மூலம் மேற்கொண்டுள்ள டெங்கு  தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    கொசு ஒழிப்புப் பணி, வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அபேட்டு மருந்து தெளித்தல், சாலையோரம், நீர் தேங்கும் பகுதிகளில் சுத்தம் செய்தல் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
    இதைத் தொடர்ந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரச் சிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.மாலதி,  வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.இந்திராணி, ப.தெய்வாணை உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai