Enable Javscript for better performance
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 04th November 2017 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மாவட்டத் தலைவர் சேக்நவீத் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் டாக்டர் செழியன், சுப்பிரமணியம், பாச்சல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் வரவேற்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரண்ரால்வார் பங்கேற்று பேசியதாவது:
    நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை முடிவு பெற்று தேர்தல்  பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை கடந்த 2ஆம் தேதி முதல் வரும் 5ஆம் தேதி வரை ஆய்வு செய்யப்படும்.
    உறுப்பினர் சேர்க்கை சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் வரும் 6-ஆம் தேதி இணையதளம் மூலம் வெளியிடப்படும்.
    நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ்  மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
    தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இணையதளத்தில் வரும் 9ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடப்படும். தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
    கூட்டத்தில்  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சித்திக், பாண்டியன்,வீரப்பன், மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம், நகர நிர்வாகிகள் செல்வன்,குமார்,லோகநாதன், சதீஸ் கண்ணன், வட்டார தலைவர்கள் ராசிபுரம் கணேசன், புதுச்சத்திரம் இளங்கோ, நாமகிரிப்பேட்டை இருசப்பன்,மகளிரணி கன்னியம்மாள், ராணி, முன்னாள்  நாமக்கல் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன்,ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai