Enable Javscript for better performance
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட அவைத் தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு  மாவட்ட கழகப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன் முன்னிலை வகித்தார். நாமக்கல் நகரச் செயலாளர் சி.மணிமாறன் வரவேற்றார்.
    நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து வரும் 6-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து  வரும் 8-ஆம் தேதி கருப்பு சட்டை அணிந்து நாமக்கல் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பொன்னுசாமி, கே.பி.ராமசாமி பி.ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai