யோகா போட்டியில் பரமத்தி மலர் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published on : 04th November 2017 07:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாநில அளவிலான யோகா போட்டியில் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
சேலம் ப்ரிஸ்டைல் யோகா சங்கம் சார்பில், சேலத்தில் உள்ள முகுந்தா இன்டர்நேஷனல் பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 பள்ளிகளிலிருந்து 730 மாணவ,மாணவிகள்கலந்துகொண்டனர்.
போட்டியில் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் அக்ரோபாட்டிக் போட்டிகளில் முதலிடமும், ரிதமிக் போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்றனர். தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெற்று ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாமிடமும், பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவ,மாணவிகள் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை யோக ஆசிரியை மலர்கொடியையும் பள்ளியின் தலைவர் பழனியப்பன்,செயலாளர் கந்தசாமி, பொருளாளர்,வெங்கடாஜலம் பள்ளியின் இயக்குநர்கள்,ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டினர்.