Enable Javscript for better performance
வட்டார வள மையத்தில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    வெண்ணந்தூர் வட்டார வளமையம் சார்பில் நான்கு குறு வளமையங்களில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
    இதில் வெண்ணந்தூர், வடுகம்பாளையம், மின்னக்கல்,  வாய்க்கால்பட்டறை, நாச்சிபட்டி, அனந்தகவுண்டம்பாளையம்  உள்ளிட்ட 13 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி வெண்ணநதூர், புதுப்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்றது.
    இந்த கண்காட்சியில் உணவு பாதுகாப்பு, போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம் போன்ற தலைப்புகளைச்சார்ந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு டெங்கு காய்ச்சல் கழிவு நீர் மேலாண்மை படைப்புக்கு முதல் பரிசும், சத்தான உணவுகள் குறித்த படைப்புக்கு வெண்ணந்தூர் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.
    வட்டார வளமைய மேற்பார்வையாளர் மலர்கொடி, பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார வளமைய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai