கொல்லிமலை அருகே 10 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு
By DIN | Published on : 05th November 2017 08:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கேட்பாரற்று கிடந்த பத்து நாட்டுத் துப்பாக்கிகளை வாழவந்திநாடு போலீஸார் சனிக்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில், ஆய்வாளர் சுபாஷ் மற்றும் போலீஸார் சனிக்கிழமை கொல்லிமலை திருப்புளிநாடு ஊராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாடசோலை கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் பத்து நாட்டுத் துப்பாக்கிகள் கிடந்துள்ளன. அந்தத் துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர்.
மேலும் இதுகுறித்து வாழவந்திநாடு போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாழவந்திநாடு போலீஸார் வழக்குப் பதிந்து, துப்பாக்கிகளை விட்டுச் சென்ற நபர்கள் யார்?, வனவிலங்குகளை வேட்டையாட இவை பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.