Enable Javscript for better performance
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வணிக வளாகம், குடியிருப்புக் கட்டடங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வணிக வளாகம், குடியிருப்புக் கட்டடங்கள் திறப்பு

    By DIN  |   Published on : 05th November 2017 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நகர் கோட்டை பகுதியில் புதிதாக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம், அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கோட்டை திப்பு சுல்தான் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்பில் திப்பு வணிக வளாகம், மஜீத் நிர்வாக அலுவலகம் மற்றும் இமாம் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
    இதற்கான திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் வணிக வளாகம், மஜித் நிர்வாக அலுவலகம், இமாம் குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்தனர்.
    விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திரசேகர், பொன்.சரஸ்வதி, பாஸ்கர், நாமக்கல் கோட்டை திப்பு சுல்தான் பள்ளிவாசல் தலைவர் சபியுல்லா, செயலாளர் பஷீர்அகமது, பொருளாளர் பாபு, துணைத் தலைவர் தாஜ்தீன், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai