நான்கு வருடங்களாக திறக்கப்படாத பொதுக் கழிப்பிடம்
By DIN | Published on : 05th November 2017 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருந்ததியர் காலனியில் உள்ள பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
உடனடியாக இந்தப் பொதுக் கழிப்பிடத்தைத் திறக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலப்பட்டி அருந்ததியர் காலனியில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அப்போதைய பரமத்தி வேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தனியரசின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் செலவில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது.
இந்த பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு நான்கு வருடங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் புதர்மண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் திறந்தவெளியில் சென்று வருவதால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்தப் பொதுக் கழிப்பிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாகத் திறக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.