Enable Javscript for better performance
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேக முன்பதிவு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேக முன்பதிவு தொடக்கம்

    By DIN  |   Published on : 06th November 2017 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2018ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 640 பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனர்.
    நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு நாள்தோறும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 1008 வடைமாலை, வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகத்துக்கு செய்யப்படும் செலவை பக்தர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். தற்போது ஒரு நாளுக்கான செலவை 5 பக்தர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
    இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான அபிஷேகத்துக்கான முன்பதிவு கோயில் செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 2018ஆம் ஆண்டின் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த நாள்களுக்கு ஒரே நாளில் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. இதுவரையில் 640 பேர் தினசரி அபிஷேகத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதர நாள்களுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறும் என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai