Enable Javscript for better performance
நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 06th November 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான  தடகளம்  மற்றும்  குழு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன.
    இதுகுறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.7) காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
    கால், கை ஊனமுற்றோர், உயரம் குறைந்தோருக்கு 50 மீ மற்றும் 100 மீ ஓட்டப்பந்தயமும், முற்றிலும் பார்வையற்றோர் மற்றும் மிகக் குறைந்த பார்வையற்றோருக்கு ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீ மற்றும் 100 மீ ஓட்டப்பந்தயமும், காது கேளாதவர்களுக்கு 100 மீ, 200 மீ மற்றும் 400 மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடைபெறுகின்றன.
    மேலும், கை, கால் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து, மேசைப்பந்து போட்டிகள், பார்வையற்றோருக்கு கைப்பந்து, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு எறிபந்து போட்டி, காது கேளாதோருக்கு கபடி போட்டியும் நடத்தப்பட உள்ளது.  இதில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai