Enable Javscript for better performance
பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் "ராப்சோடி-2017' கலை விழா- Dinamani

சுடச்சுட

    

    பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் ராப்சோடி-2017 என்ற கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர்  ஸ்ரீகாந்த், கெளரவ விருந்தினராக ரோஹன் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    தாளாளர் மங்கைநடராஜன்  குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். முன்னதாக பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் கலாசார கலைகளின் செயலாளர் ஜோஸ்ட்னா.டி. கிருபா  வரவேற்றார். சிறப்பு விருந்தினர் நடிகர் ஸ்ரீகாந்த் விழாவில் பேசியது:
    எந்த ஒரு போட்டியிலும் வெற்றி,தோல்வி என்பதைவிட அதில் நம்முடைய பங்களிப்பே முதல் வெற்றியாகும். நாம் நம்முடைய சிறந்த பங்களிப்பை நமது வாழ்க்கைக்குக் கொடுக்க
    வேண்டும்.
    மேலும் நமது பள்ளிப் பருவத்தில் கிடைக்கும் மேடை வாய்ப்புகள் மற்றும் அதில் நாம் காணும் வெற்றிகளே நம்மை உலகத்திற்கு அடையாளப்படுத்தும். எனவே வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் என்றார்.
    அதைத் தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின்  தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர்.சி.சதீஷ் ஆகியோர் நடிகர் ஸ்ரீகாந்த்-க்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
    தொடக்க விழாவைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான நடனப்போட்டி, விவாதப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. விழாவின் இறுதியாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் துணைச் செயலாளர் என்.பழனிவேல், இயக்குநர் (மாணவர் நலன்) அவந்திநடராஜன், திஆர்ட் ப்ரு நிறுவனத்தின் முதன்மைசெயல் அலுவலர் ராஜவேல், இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (நிர்வாகம்) முனைவர்.கே.கே.இராமசாமி , முதன்மையர்கள், ஆசிரியர்கள், பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர்.சி.  சதீஸ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai