Enable Javscript for better performance
ராசிபுரம் வட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடவடிக்கை குழு அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் வட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடவடிக்கை குழு அமைப்பு

    By DIN  |   Published on : 06th November 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் வட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைபடி, ஈட்டுபடி அரசிடம் பெறுவதற்கான கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 2017-ன் படி, வெளியிட்ட அரசு ஆணையில் சேலம் மாநகராட்சிக்குண்டான வீட்டு வாடகைபடி மற்றும் நகர ஈட்டுபடி பெற தகுதியானவை என அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது.
    இதன்படி ராசிபுரம் வட்டம், சேலம் மாநகராட்சி எல்லையில் இருந்து, 16 கி.மீ. சுற்றெல்லையில் அமைந்துள்ளது. அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ள பலன்களை வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலங்கள், அரசு, அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கு பெற்று வழங்குவதற்காக கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கூட்டு நடவடிக்கைக் குழு பொறுப்பாளர்கள் விவரம்:
    ஒருங்கிணைப்பாளர் வெ.முருகேசன் (நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்),  தலைவர்-வெ.பாலமுரளி, செயலர்-க.மோகனமாதவன், பொருளாளர்-கு.அத்தியப்பன், துணைத் தலைவர்கள்-மு.செந்தில்ராஜா,  பாலசுப்பிரமணி,  வெ.சந்திரசேகரன், செல்வகணபதி, துணைச் செயலர்கள்- கா.சம்பத்குமார், சுப்ரமணி, பெ.பழனிசாமி, எடின்பரோ.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai