Enable Javscript for better performance
ஞானோதயா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற ஞானோதயா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
    பள்ளிகளுக்கு இடையேயான நுண்கலை திறன்வளர்ப்பு போட்டிகளான "ரக்ப்ஷோடி - 2017' என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன.
    இதில், தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து இருபத்தைந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
    இதில், நீட் தேவையா? தேவையில்லையா? என்ற தலைப்பில் நடைபெற்ற தமிழ் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு பேசிய ஞானோதயா பள்ளி மாணவர்கள் கே.ரித்திஷ், எம்.முகமதுஜாவித், கே.ஜானியா ஜித்தாஞ்சலி, எஸ்.வி.சுபிக்ஷா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி ஏ.தீக்ஷிதா பாடல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார்.
    பிரைம் சதுரங்க அகடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில், இப்பள்ளி மாணவி பி.ஹேமஸ்வர்ணா மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றார். பல்வேறு போட்டிகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் தி.அரங்கண்ணல்.
    தாளாளர் பி.மாலாலீனா. இயக்குநர்  உஷாநடராஜன். முதல்வர் ஜி.ஆரோக்கியராஜ், நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai