Enable Javscript for better performance
நிலப் பிரச்னையில் உறவினர் மிரட்டல்: கர்ப்பிணிப் பெண் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    நிலப் பிரச்னையில் உறவினர் மிரட்டல்: கர்ப்பிணிப் பெண் தீக்குளிக்க முயற்சி

    By DIN  |   Published on : 07th November 2017 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலப் பிரச்னையில் போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கர்ப்பிணிப் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாமக்கல் மாவட்டம்,  பரமத்திவேலூர் அருகே கல்லுக்குத்திதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி அமுதா (25).  நிறைமாதக் கர்ப்பிணியான இவர்,  திங்கள்கிழமை காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிராதான வாயில் அருகே தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து திடீரென தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக அமுதாவை தடுத்து நிறுத்தினர்.
    இதையடுத்து,  போலீஸார் விசாரணையில் அவர் தெரிவித்தது:  எங்கள் குடும்பத்துக்கும்,  எனது கணவரின் பெரியப்பா ராமசாமி குடும்பத்தினருக்கும் குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.  இதுகுறித்து பரமத்திவேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    இந் நிலையில்,  கடந்த 4-ஆம் தேதி எங்களுக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் பாதையை ராமசாமி கற்களை போட்டு அடைத்தார்.  இதனை தட்டிக்கேட்ட எனது கணவரையும்,  என்னையும்,  ராமசாமி மற்றும் அவரது உறவினர்கள் கடுமையாகத் தாக்கினர். இதில் எனக்கும், என் கணவருக்கும் காயம் ஏற்பட்டது.
    இதுகுறித்து மோகனூர் போலீஸில் புகார் தெரிவித்த நிலையில்,  எங்கள் மீதே போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    இந்த நிலையில்,  திங்கள்கிழமை காலை நாமக்கல் அரசு மருத்துவமனை முன் நின்றிருந்த என்னிடம், ராமசாமியின் மகள் கவிதா கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
    எனவே, எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு,  எங்கள் மீது தாக்குதல் நடத்திய ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai