Enable Javscript for better performance
இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்

    By DIN  |   Published on : 09th November 2017 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.9) நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணம், மாதாந்திர உதவித்தொகை மற்றும் சுயதொழில் செய்ய வங்கிக் கடன் மானியம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்பட்ட மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அரசின் நலத்திட்ட  உதவிகள் கிடைக்க ஆவண செய்யப்படும்.
    மேலும், இம்முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள்,  மாதாந்திர உதவித்தொகை, சுயதொழில் செய்ய அரசு மானியத்துடன் கடன் பெறுவது தொடர்பான உதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
    எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai