Enable Javscript for better performance
திருமணமான ஒரே வாரத்தில் மணப்பெண் விபத்தில் பலி- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திருமணமான ஒரே வாரத்தில் பெங்களூரைச் சேர்ந்த மணப்பெண் உயிரிழந்தார்.
    பெங்களூரு ராமசந்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (25).  இவருக்கும், வித்யா (20) என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது.
    இதையடுத்து,  திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக மகேஷ்,  வித்யா, வித்யாவின் தந்தை மாதப்பன் (46), தாய் கிரிஜா (38) ஆகிய நான்கு பேரும் கடந்த 4-ஆம் தேதி காரில் திருச்செந்தூர் சென்றனர். காரை மகேஷ் ஓட்டிச் சென்றார்.
    தரிசனம் முடித்துக்கொண்டு கடந்த 6-ஆம் தேதி பெங்களூரு திரும்பினர்.  பரமத்தி அருகே கீரம்பூர் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த விளம்பரப் பலகை தூண் மீது மோதியது.  இதில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
    அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  படுகாயமடைந்த வித்யா மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
    விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai