Enable Javscript for better performance
மல்லசமுத்திரத்தில் மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மல்லசமுத்திரம் உள்வட்டத்துக்குள்பட்ட மங்களம் கிராமம் அழகு நாச்சியம்மன் திருக்கோயில் அருகில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
    முகாமில் 229 பயனாளிகளுக்கு ரூ.62.41 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பேசியது: மனுநீதி நாள் முகாம் என்பது கடைக்கோடி மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, மக்களைத்தேடி அரசாங்கம் என்ற குறிக்கோளோடு மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர்கள் நிலையிலான மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    இதுபோன்ற மனுநீதி நாள் முகாம்களில் எந்தந்த துறைகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைக்கின்றனர்.
    மேலும், இம்மனுநீதி நாள் முகாமில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதங்கள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருகின்றன.
    அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு அரசு அறிவித்து செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான திட்டங்களுக்கு விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்து தங்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai