Enable Javscript for better performance
நவ.12-ல் சேலம் - ராசிபுரம் பகுதியில் நீட் பயிற்சி உதவித் தொகைக்கான தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    நவ.12-ல் சேலம் - ராசிபுரம் பகுதியில் நீட் பயிற்சி உதவித் தொகைக்கான தேர்வு

    By DIN  |   Published on : 10th November 2017 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம், ராசிபுரம் பகுதிகளில் ஐஐடி., நீட் தேர்வுக்கான பினாக்ள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இப் பயிற்சி மையம் சார்பில், மாணவர்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கு நீட் பயிற்சி வழங்க முழு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு நவ.12-ல் ஐந்து மையங்களில் நடைபெறுகிறது.
    பினாக்ள் பயிற்சி மையம் ஐஐடி., ஜேஇஇ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுக்கு பிரத்யேகப் பயிற்சி வகுப்பை சேலம், ராசிபுரம் பகுதிகளில் நடத்தி வருகிறது. மேலும் சேலம் குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம் எஸ்ஆர்வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராசி இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய பள்ளிகளுடன் உடன்படிக்கை மேற்கொண்டு மாணவ- மாணவியருக்கும் பயிற்சியளித்து வருகிறது.
    இந்நிலையில், 2018-19-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத பயிற்சி வழங்குகிறது. இப்பயிற்சிக்கு முழு உதவித்தொகை வழங்கிட நவ.12-ல் தேர்வு நடைபெறுகிறது. சேலம் பினாக்ள் பயிற்சி மையம், சேலம் குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளி, எஸ்ஆர்வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எஸ்ஆர்வி., ஹைடெக் மகளிர் பள்ளி  ஆகிய 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஐஐடி., ஜேஇஇ., நீட் போன்ற தேர்வின் மூலம் மாணவர்களின் கனவை நனவாக்க 20 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. இப்பயிற்சிக்கு முழு உதவித் தொகை பெற நவ.12-ல் நடைபெறும் தேர்வை சேலம், நாமக்கல் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பயிற்சி மைய இயக்குனர்கள் எஸ்.சாய்ராம், சி.எச்.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளனர். இதற்கான தொலைபேசி எண்-89408 36533, 9840337371.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai