Enable Javscript for better performance
நீதிமன்றத்தில் சரணடைந்த மேலும் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்றத்தில் சரணடைந்த மேலும் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை

    By DIN  |   Published on : 10th November 2017 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூரில் நிதி நிறுவன அதிபர் மற்றும் சமூக ஆர்வலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 4 பேரை தனிப் படையினர் கைது செய்தனர். மேலும், சங்ககிரி நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று பேரை பரமத்தி வேலூர் போலீஸார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     பரமத்திவேலூர் கந்தநகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணியன் (54). இவர் நிதி நிறுவனம் மற்றும் கல்குவாரி வைத்து நடத்தி வருகிறார். இவரது கல்குவாரியில் கிடைத்த விலை மிதிப்புமிக்க கல் ஒன்றை விற்றுத்தருமாறு சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஷாபாய் மகன் ஹயத்பாஷாவிடம் (37) விலை மதிப்பு மிக்க கல்லின் புகைப்படத்தை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஹயத்பாஷா தன்னிடம் மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் கல்லை வாங்கிக் கொள்வதாகவும், கடந்த மாதம் 31}ஆம் தேதி நேரில் வந்து முன்தொகை தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த கல்லை அபகரிக்கும் நோக்கில் ஹயத்பாஷா  சேலம்,மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 பேருடன் காரில் வந்து மணியன் மற்றும் உடன் இருந்த பொத்தனூரைச் சேர்ந்த நாராயணன் மகன் மதியழகன் (47) ஆகியோரையும் வெட்டியுள்ளனர்.
    இதைப் பார்த்த நிதி நிறுவன மேலாளர் ஸ்ரீதர்,மணியனின் உறவினர் பூபதி ஆகியோர் வெளியே ஓடி வந்து சத்தம் போட்டுள்ளனர். அக்கம்,பக்கத்தில் இருந்து பொதுமக்கள் வருவதை பார்த்தவுடன் அங்கிருந்து ஹயத்பாஷா உள்ளிட்ட 7 பேரும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடியுள்ளனர். பின்னர் படுகாயமடைமடைந்த மணியன் மற்றும் மதியழகன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வந்தனர். கடந்த 2}ஆம் தேதி தனிப் படையினர் வேலூரில் இருந்து கபிலர்மலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதையடுத்து அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், கடந்த 31}ஆம் தேதி மணியன் மற்றும் மதியழகனை வெட்டிவிட்டு விலை உயர்ந்த கல்லை பறித்துச் செல்வதற்காக வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
    இதையடுத்து சேலத்தைச் சேர்ந்த ஹயாத்பாட்ஷா, கார்த்திக் (எ) எலும்பன் கார்த்திக்,பாபு,கேரளா மணி (எ) மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கார் மற்றும் ஆயுதங்களை பரமத்திவேலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரும் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய மூன்று பேரை தேடி வந்தனர். இந்தநிலையில், மேட்டூரைச் சேர்ந்த முருகேசன் மகன் குமார் (எ) செந்தில்குமார் (32), திருச்செங்கோட்டைச் சேர்ந்த நல்லமுத்து மகன் சிவசங்கர் (32), பூமாலை சுப்பிரமணியன் மகன் விக்னேஷ் (23) ஆகிய மூன்று பேரும் சங்ககிரி நீதிமன்றத்தில் கடந்த 6}ஆம் தேதி சரணடைந்தனர். சரணடைந்த மூன்று பேரையும் பரமத்திவேலூர் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai