Enable Javscript for better performance
பண மதிப்பிழப்பால் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    பண மதிப்பிழப்பால் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

    By DIN  |   Published on : 10th November 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்தவர்களுக்கு நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்தினர்.
    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்த பண மதிப்பிழப்பினால் கடந்த ஆண்டு ஏடிஎம், வங்கி வாசல்களில் நின்று நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
    உயிரிழந்தவர்களுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். இதில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சித்திக், பாண்டியன்,குமரன், சண்முகம், ராம்குமார், வீரப்பன், மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம், பொருளாளர் கமல்நாத், வட்டார தலைவர்கள் செங்கோட்டுவேல், இளங்கோ, சதீஷ்கண்ணன், முன்னாள் நாமக்கல் நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
    கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai