Enable Javscript for better performance
டெங்கு பாதிப்பு: அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு பாதிப்பு: அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 13th November 2017 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெங்கு கொசுக்கள் அதிகம் பரவ அரசு கட்டடங்களும் காரணமாக உள்ளது. இதனால் மழை காலம் முடியும் வரை அரசு அலுவலகங்களை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தீவிரமடைந்து வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மஸ்தூர் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இரண்டு மாதங்களாக வீடுகளில் உள்ள தண்ணீர் தேங்கும் இடம் சுத்தம் செய்வது, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தாலும் டெங்கு கட்டுப்பாட்டில் இல்லை. தினமும் சுமார் 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
     கடந்த 3 மாதங்களில் டெங்குவால் 20-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த சுகாதார அதிகாரிகளின் பார்வை அரசுத் துறை கட்டடங்கள் பக்கம் திரும்ப வேண்டும். அரசு பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பொதுப் பணித் துறை அலுவலகம், காவல் நிலையங்கள் போன்ற அரசுத் துறை அலுவலகங்கள் தான் டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்க காரணமாக உள்ளது.
    காவல் நிலையங்களில் விபத்துக்களில் சிக்கும் வாகனங்களை நீண்ட நாள்களாக நிறுத்தி வைப்பதால் மழைநீர் தேங்கி லார்வா புழு உருவாகக் காரணமாக உள்ளது. அதேபோல், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மானிய வீடுகளுக்கு அளிக்கும் பழைய வீட்டு பொருள்கள் அலுவலகத்தின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறைகளுக்காக கட்டிய தண்ணீர் தொட்டிகள் பயன்பாடு இல்லாமல் உள்ளன.
    அதுபோன்று அரசு அலுவலகங்களில் சுற்றியுள்ள பொருள்களில் மழைநீர் தேங்குவதால் டெங்கு கொசு பரவ அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அரசாங்க அதிகாரிகள், அரசு அலுவலகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை காலம் முடியும் வரை 15 நாள்களுக்கு ஒரு முறை அரசு அலுவலகங்களை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai