Enable Javscript for better performance
ராசிபுரம் அருகே பெண் காவலர் கணவரின் சடலம் கிணற்றில் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே பெண் காவலர் கணவரின் சடலம் கிணற்றில் மீட்பு

    By DIN  |   Published on : 13th November 2017 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் அருகே பெண் தலைமைக் காவலரின் கணவர் விவசாயக் கிணற்றுக்குள் இறந்து கிடந்தார்.
    ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து
    வருபவர் பரிமளா. இவரது கணவர் சிவபாலன் (47).  அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவசங்கர் (9), மௌலேஸ் (6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சிவபாலன் வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு குடும்பத்தில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிவபாலன் ராசிபுரம் அருகேயுள்ள சின்னகாக்காவேரி முத்துகோபால் என்பவரின் விவசாயக்  கிணற்றில் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற பேளுக்குறிச்சி போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai