Enable Javscript for better performance
வட்டார அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு  பள்ளிபாளையம் வட்டார அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.
    வட்டார வள மையத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், சுத்தம் சுகாதாரம் ஆகிய தலைப்புகளில் 1 முதல் 3 வகுப்புகள், 4 மற்றும் 5 வகுப்புகள், 6 முதல் 8 வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா தொடங்கி வைத்தார்.
    6 முதல் 8 வகுப்புகள் பிரிவில் பேச்சுப் போட்டியில் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி ஸ்ரீதேவி, கட்டுரைப் போட்டியில் மைதிலி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பேச்சுப் போட்டியில் கொக்கராயன்பேட்டை அரசுமேல்நிலைப் பள்ளி மாணவி தனுஸ்ரீ இரண்டாமிடம், செளதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி மூன்றாமிடம் பிடித்தனர்.
    கட்டுரைப் போட்டியில் எலந்தக்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஆனந்தி இரண்டாமிடம், வி.மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி பிரியங்கா மூன்றாமிடம் பிடித்தனர். ஓவியப் போட்டியில் குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவன் பரணிதரன், அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் சந்தோஷ், காடச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் கார்த்தி முதல் மூன்றிடங்களைப் பிடித்தனர்.
     1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான ஓவியப் போட்டியில் ஆலங்காட்டுவலசு தொடக்கப் பள்ளி மாணவி தர்ஷினி, வேமன்காட்டுவலசு தொடக்கப் பள்ளி மாணவன் கதிரவன், அலமேடு நடுநிலைப் பள்ளி மாணவன் வித்யாசங்கர் ஆகியோர் முதல் மூன்றிடங்கள் பிடித்தனர். 4 மற்றும் 5-ம் வகுப்புக்கான பேச்சுப் போட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவன் முகிலன், நாராயணநகர் நடுநிலைப் பள்ளி மாணவன் மிதுன்குமார், ஜேகேகே நடராஜா நகர் நகராட்சிப் பள்ளி மாணவி உமாதேவி முதல் மூன்றிடங்கள் பிடித்தனர்.
    முதல், இரண்டாமிடம் பிடித்தோர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆசிரியப் பயிற்றுநர்கள் மஞ்சுளா, மல்லிகேஸ்வரி, சங்கீதா, விஜயகுமார், மணிகண்டன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai