Enable Javscript for better performance
விசைத்தறி தொழிலை பாதுகாக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    எலச்சிப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செங்கோடன்,குப்புசாமி,ஜெயந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
    மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில் திருமணிமுத்தாற்று நீர் வழித்தடங்களை சீர்படுத்தி, ஆழப்படுத்தி நீர் விட வேண்டும். வையப்பமலையில் காவல் நிலையம் அமைத்திட வேண்டும். எலச்சிபாளையத்தில் தேசிய வங்கி கிளை அமைக்க வேண்டும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    நிறைவாக திருப்பூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கவேல் நிறைவுரையாற்றி புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai