Enable Javscript for better performance
நவ.20-இல் சேமிப்பு தானியங்களில் பூச்சி, நோய் மேலாண்மை இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நவ.20-இல் சேமிப்பு தானியங்களில் பூச்சி, நோய் மேலாண்மை இலவசப் பயிற்சி

    By  நாமக்கல்,  |   Published on : 16th November 2017 10:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேமிப்பு தானியங்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த இலவசப் பயிற்சி நாமக்கல்லில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
     இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்தி:
     நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு சேமிப்பு தானியங்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது.
     இப்பயிற்சி முகாமில், தானியங்களை காய வைத்தல், சேமித்தல், ஈரப்பதத்தைக் கண்டறிதல், சேமிக்கும் முறைகள், சேமிப்பில் வரக்கூடிய பூச்சிகள் மற்றும் பூஞ்சாணங்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
     இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
     விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, வரும் 19-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai