Enable Javscript for better performance
நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    By  நாமக்கல்,  |   Published on : 16th November 2017 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.17) நடைபெறவுள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17}ஆம் தேதி நடைபெறவுள்ளது. டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் பேன்ற பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு விற்பனையாளர், விற்பனைப் பிரதிநிதி, கண்காணிப்பாளர், மேலாளர், கணினி பயிற்றுநர், கணக்காளர், காசாளர் தட்டச்சர், மெக்கானிக், விற்பனை கண்காணிப்பாளர், இரவு காவலர் மற்றும் ஆசிரியர் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப் படிப்பு பிஎட் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆள்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
     இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வரும் 17}ஆம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுதவிர, இதர கல்வித் தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai