Enable Javscript for better performance
சீமைக்கருவேல மரம் ஏலம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சீமைக்கருவேல மரம் ஏலம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    By  நாமக்கல்,  |   Published on : 17th November 2017 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீமைக் கருவேல மரம் வெட்டுவது தொடர்பான ஏலம் நடத்தாததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏலதாரர்கள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     நாமக்கல் அருகே வள்ளிபுரம் மற்றும் வீசாணம் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்ட ஏலம் நடப்பதாக நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து சேலம், கோவை, திருப்பூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ள வியாழக்கிழமை காலை நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
     ஆனால், மாலை 4 மணி வரை ஏலம் நடத்த எந்த முன் ஏற்பாடும் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. இதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் சமரசம் செய்தனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், வேறொரு தேதியில் ஏலம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். இதையேற்று முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai