Enable Javscript for better performance
நவ.24இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
     இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
     இக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் நிலம், பால் தொடர்பான பிரச்னைகள் மற்றும் விவசாயம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai