Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் நூலக வார விழா- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் நூலக வார விழா மற்றும் தன்னம்பிக்கை பயிலரங்கம் நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    பள்ளித் தலைமையாசிரியர் பழனிசாமி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் டி.எம்.மோகன் அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக என்.டி.சி ஒட்டுநர் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும் சாலைகளில் விபத்தின்றி செல்வது குறித்துப் பேசினார்.  
    நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை பொருளாளர் திருக்குறள் ராசா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் ரவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நரசிம்மன், மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் ஜோதிலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 
    மாணவர்களுக்கு இயல், இசை, நாடகங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நாமக்கல் தலைமை நூலக அலுவலர் தெளலத்பீ நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai