Enable Javscript for better performance
மாணவி கடத்தல் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    மாணவி கடத்தல் வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  
    நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட  என்.புதுப்பட்டி அருகே மேலப்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மணிகண்டன் (24), பஞ்சர் கடை வைத்துள்ளார்.  இவர் கடந்த ஆண்டு ஜனவரி 15 }ஆம் தேதி, தொட்டியபட்டியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
    புகாரின்பேரில் மோகனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.2,000 அபராதம் விதித்து  நீதிபதி இளங்கோ வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.  இதனையடுத்து, மணிகண்டன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai