Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில்,  100}க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
     சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நவம்பர்17}இல் கொண்டாடப்படுவதையொட்டி,  நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
    இந்தப் போட்டிகளை  ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து,  தொடக்கிவைத்தார்.  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 வயது முதல் 14 வயது வரையும்,  15 வயது முதல் 17 வயது வரையும்,  17 வயதுக்கு மேற்பட்டோருக்கும் என 3  பிரிவுகளின் கீழ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டப் பந்தயம் நின்று நீளம் தாண்டுல்,  வட்ட தட்டு எறிதல், காலிப்பர் மற்றும் கால் தாங்கி கட்டையுடன் நடப்போருக்கு நடைப்போட்டி, கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 100}க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 
     போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  போட்டியில் சிறப்பிடம் பிடித்தவர்கள் டிசம்பர் 1}ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநிலப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai