Enable Javscript for better performance
மின் விபத்து: பொதுமக்களுக்கு அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் செயற் பொறியாளர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விபத்துகளை தவிர்த்திட மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
    அதில், அறுந்தி கிடக்கும் மின் கம்பிகளை மிதிக்காமலும், அவ்வாறு அறுந்து கிடப்பது தெரியவந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் உள்ள இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டுவது, ஈரத் துணிகளை உலர்த்துவது, சிறு குழந்தைகள் மின் கம்பத்தின் இழுவை கம்பிகள் அருகே விளையாடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
    ஈரக் கையுடன் மின் விளக்கை எரிய வைக்க கூடாது. மின் கம்பிகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வெட்ட முயற்சிக்கக் கூடாது. மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் கட்டக்கூடாது. உடைந்த மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் மின்சாரம் சம்மந்தபட்ட குறைபாடுகளை இருந்தால் உடனடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai