Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு  50ஆயிரம் மின் இணைப்புகள்: அமைச்சர் பி. தங்கமணி- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு  50ஆயிரம் மின் இணைப்புகள்: அமைச்சர் பி. தங்கமணி

    By DIN  |   Published on : 18th November 2017 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின்படி,  இந்த ஆண்டு 50 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் தங்கமணி.
    கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்ட்ட, குரும்பலமகாதேவியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திகட்டிட திறப்பு விழா,சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா மற்றும் கிராம சேவை மைய கட்டடத் திறப்பு விழா ஆகியன வியாழக்கிழமை நடைபெற்றன. 
    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.  விழாவில் தங்கமணி பேசியதாவது:-
    ரூ.20 லட்சம் செலவில் குரும்பலமகாதேவியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் உள்ள 1952 உறுப்பினர்களுக்கு ரூ.14.02 லட்சத்தில் பங்கு ஈவுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 
    2011,2016}ஆம்  ஆண்டுகளில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது கூட்டுறவு வங்கிகளில் சிறு,குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முதல் கையெழுத்திட்டார். இதன் அடிப்படையில் 2016}ஆம் ஆண்டு ரூ.5,270 கோடி அளவுக்கு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 
    நகை கடன்,குறுகிய கால கடன் உள்ளிட்ட திட்டங்களை விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியிலேயே பெற்றுக்கொள்ளும் திட்டத்தையும் அரசு கொண்டுவந்தது. விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரவேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் படி இந்த ஆண்டு 50 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 
    மேலும் விவசாயிகளிடம் இருந்து மின் இணைப்புக்கோரி பெறப்பட்ட 20 ஆயிரம் மனுக்களில் இதுவரை சுமார் 3, 500}க்கும் மேற்பட்டோருக்கு மினி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
    நிகழ்ச்சியில் குரும்பலமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் குமாரசாமி,கூட்டுறவு சங்க துணை பதிவாளர் முகமது சலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai