Enable Javscript for better performance
5 ஆண்டுகளுக்கு பின்னர் நெல் சாகுபடி- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவது. இதனால், நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் வட கிழக்குப் பருவ மழையை எதிர்நோக்கியுள்ளனர். 
    நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1.25 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நெல் 50,000 ஹெக்டேரிலும், கரும்பு, வாழை, காய்கறிகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள் சுமார் 75,000 ஹெக்டேர் நிலத்திலும் பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 75 சதவீத விவசாய நிலங்கள் ஏரி, கிணறு பாசனத்தை நம்பியே உள்ளன. 
    மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் நிலத்தில் நிலத்தில் செய்யப்பட்டு வந்த நெல் விவசாயம் கடந்த 5 ஆண்டுகளாக மழை இல்லாததாலும், காவிரியில் தண்ணீர் வராததாலும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 100 ஹெக்டேருக்கும் குறைவாகவே நெல் சாகுபடி செய்யப்பட்டது.  
    15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல் குறுவை,  சம்பா எனப்படும் இரு போக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலை மாறி விவசாயம் என்பது முழுமையாகக் குறைந்து வருகிறது.  வழக்கமாக நாமக்கல் மாவட்டத்துக்கு வடகிழக்கு பருவமழையே கை கொடுக்கும். கடந்த சில ஆண்டுகளாக மாவட்டம் முழுவதும் போதிய மழை இல்லாமை, காலம் தவறிய மழை உள்ளிட்டவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
    கோடை மழை,  தென் மேற்கு பருவமழை இயல்பான அளவான 557 மி,மீ காட்டிலும் கூடுதலாக 27 மி.மீ அளவு பெய்துள்ளது. குமாரபாளையம், திருச்செங்கோடு, மோகனூர், நாமக்கல், கொல்லிமலை, ராசிபுரம் வட்டாரங்களில் அதிகமாக மழை பெய்துள்ளது. 
    இந்தப் பகுதியில் சுமார் 30 சதவீதப் பகுதிகளில் மட்டுமே இந்த மழை பெய்துள்ளதால், பிற பகுதிகள் கடந்த ஆண்டு நிலையிலேயே தொடர்கின்றன. கடும் வறட்சியால் கடந்த 5 ஆண்டுகளாக விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக கிடந்தன. நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை பரவலாக மழை பெய்துள்ள போதிலும் பெரும்பாலான ஏரி, குளங்களுக்கு 20 முதல் 50 சதவீதம் வரையிலேயே தண்ணீர் வந்துள்ளது. இதனால் நிகழாண்டும் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கவில்லை. 
    சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய வடகிழக்குப்பருவ மழை, நாமக்கல் மாவட்டத்தில் தூறலோடு நின்று விட்டது. 
    தென்மேற்கு பருவமழை கொடுத்த நம்பிக்கையில், வடகிழக்கு பருவமழை முழுமையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் நிலத்தடி நீரை நம்பி மாவட்டத்தில் இதுவரை 2,146 ஹெக்டேரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். 
    ஆனால் வடகிழக்கு பருவ மழை தொடக்கத்துடன் நின்று போனது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யதாதால் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களில் மிகக்குறைவான அளவே நீர் காணப்படுகிறது. இந்த ஆண்டும் வறட்சி நிலவினால் தாக்குப்பிடிப்பது கடினம் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai