Enable Javscript for better performance
50 சதவீத மானியத்தில் பரிசல்கள்: மீனவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    50 சதவீத மானியத்தில் பரிசல்கள்: மீனவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 19th November 2017 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீனவர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கப்படுகின்றன.
    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    தமிழகத்தில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்புத் திறனை மேம்படுத்துவும், வருவாயைப் பெருக்கிட ஏதுவாகவும் உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்க மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 2017-18 ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு
    செய்யப்பட்டுள்ளது.
    விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 16.62 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். பங்கு மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். போதுமான அளவு விண்ணப்பம் கிடைக்க பெறாத பட்சத்தில் நேரடியாக மீன்பிடிப்பில் தொடர்புள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கும் விண்ணப்பத்தின் பேரில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளுக்குள் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். விருப்பமுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு யூனிட் வலையின் மொத்த விலை ரூ. 20,000. அதற்கான 50 சதவீத மானியம் ரூ. 10,000. பரிசலின் மொத்த விலை ரூ.12,500. அதற்கான 50 சதவீத மானியம் ரூ. 6,250. மேலும் விவரங்களுக்கு மேட்டூர் அணை மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai