Enable Javscript for better performance
இந்திராகாந்தி பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
    நாமக்கல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. விழாவுக்கு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மோகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ரா. செழியன் முன்னிலை வகித்தார். விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம். ஷேக்நவீத் பங்கேற்று இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஏ. சித்திக், பாண்டியன், ராம்குமார், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் மாணிக்கம், சாந்திமணி, கமல்நாத், நகர நிர்வாகிகள் குமார்,  ராஜேந்திரன், வட்டாரத் தலைவர்கள் செங்கோட்டுவேல், இளங்கோ, டாக்டர் பாலாஜி, குப்புசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா மாவட்டத் தலைவர் ஷேக் நவீத் தலைமையில் கொண்டாடப்பட்டது.
    ராசிபுரத்தில்...
    ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். முரளி தலைமை வகித்தார். காந்தி மாளிகை டிரஸ்ட் போர்டு தலைவர் ஏ.என். சண்முகம், விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  இனிப்புகள் வழங்கினார்.
    இதில்,  காங்கிரஸ் நிர்வாகிகள் டி.ஆர். சண்முகம், நா. குபேர்தாஸ், பழனிசாமி, பெரியசாமி, செந்தில்நாதன், ஜெயபால்ராஜ், மணி, இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai