Enable Javscript for better performance
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது ஆட்சியரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது ஆட்சியரிடம் புகார்

    By DIN  |   Published on : 21st November 2017 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு, தலைமறைவாக உள்ள தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: ராசிபுரம் வி.நகர் பகுதியில் வசித்து வந்த ராமசாமி, அவரது மனைவி நவநீதம் ஆகியோர் மாத ஏலச்சீட்டு, அமாவாசை சீட்டு, எண்ணெய்சீட்டு என பல்வேறு சீட்டுக்களை நடத்தி வந்தனர். அப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனை நம்பி ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அவர்களிடம் பணத்தை செலுத்தி வந்தனர். ராமசாமி மொத்தமாக சுமார் ரூ.1 கோடி வரை சீட்டு மூலம் பணம் வசூல் செய்துள்ளார்.
    இப்போது ஏலச்சீட்டு மாதத் தவணை முடிந்து 6 மாதத்திற்கும் மேலாகியும் பணத்தை ராமசாமியும் தரவில்லையாம். இதுகுறித்து கேட்டதற்கு விரைவில் தருகிறோம் எனக் கூறி வந்தார். இந் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மனைவி, உறவினர்களுடன் ராமசாமி மாயமாகிவிட்டார். எனவே, மாயமான ராமசாமியைக் கண்டுபிடித்து, எங்களது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai