Enable Javscript for better performance
ஜேடர்பாளையம் அருகே: டிராக்டர் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஜேடர்பாளையம் அருகே: டிராக்டர் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சாவு

    By DIN  |   Published on : 21st November 2017 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு டிராக்டர் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜேடர்பாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடாஜலம் (45). இவர் கண்டிபாளையத்தில் உள்ள தனியார் நீரேற்று பாசனத்தில் வேலை பார்த்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு ஜேடர்பாளையம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வடகரையாத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜேடர்பாளையத்தில் இருந்து கண்டிபாளையத்திற்கு கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் ஒன்று வெங்கடாஜலம் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வெங்கடாஜலம் உயிரிழந்தார். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai