Enable Javscript for better performance
பவானியில் ரேக்ளா பந்தயம்: திருச்சி, குமாரபாளையம் குதிரைகள் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    பவானியில் ரேக்ளா பந்தயம்: திருச்சி, குமாரபாளையம் குதிரைகள் முதலிடம்

    By DIN  |   Published on : 21st November 2017 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானி குதிரை வண்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் திருச்சி, ஆத்தூர், குமாரபாளையம் குதிரைகள் முதலிடம் பிடித்தன.
    தீபாவளி பண்டிகையை ஒட்டி 19-ஆவது ஆண்டாக இப்பந்தயம் பவானி - ஆப்பக்கூடல் சாலையில் காடையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உள்ளூர் குதிரைகள், 43 அங்குல உயரம், 45 அங்குல உயரம், பெரிய குதிரைகள் பிரிவு என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளுக்கு, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் எம்.வெங்கடேசன் வரவேற்றார்.
    திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா, திமுக நகரச் செயலர் ப.சீ.நாகராஜன், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, துணைத் தலைவர் என்.ரவி முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் போட்டிகளைத் தொடக்கிவைத்தார்.
    முதல் மூன்று இடங்களைப் பிடித்த குதிரைகள் விவரம்: உள்ளூர் குதிரைகள் பிரிவு - குமாரபாளையம் வெங்கிடு, பவானி பாகுபலி, ஆப்பக்கூடல் பண்ணாரியம்மன்.
    43 அங்குல உயரம் பிரிவு - சேலம், ஆத்தூர் பாரத் பிரதர்ஸ், கோவை ரெட் ஹரி, குமாரபாளையம் வெங்கிடு.
    45 அங்குல உயரம் பிரிவு - திருச்சி நம்பி உதயசூரியன், பவானி கற்பக விநாயகர் சிங்காரவேலன், சேலம் பால்பண்ணை லட்சுமி.
    பெரிய குதிரைகள் பிரிவு - திருச்சி நம்பி உதயசூரியன், குமாரபாளையம் வெங்கிடு, பவானி கற்பக விநாயகர் சிங்காரவேலன்.
    வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. பவானி காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போட்டியில் சீறிப் பாய்ந்த குதிரைகளின் வேகத்தை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai